இந்திய அணுகுமுறையில் மகளிர் வளர்ச்சி, மகளிர் தலைமையிலான வளர்ச்சி என உருமாற்றம்: பிரதமர் மோடி

No comments
48வது ஜி7 மாநாடு ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் எல்மாவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார்.
ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச இருக்கிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது, வலிமையுடன் ஒன்றிணைவோம்: உணவு பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவத்தில் முன்னேற்றம் என்ற தலைப்பில் அவர் பேசினார்.

இதில் அவர் பேசும்போது, பாலின சமத்துவம் பற்றி கவலை கொள்ளும் இன்றைய சூழலில், இந்தியாவின் அணுகுமுறையானது மகளிர் வளர்ச்சி என்பதில் இருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என உருமாறியுள்ளது என கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றின்போது, முன்கள பணியாளர்களாக பெண்கள் ஆற்றிய பணியை அவர் புகழ்ந்து பேசினார்.

பெருந்தொற்று காலத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு எங்களுடைய மக்களை பாதுகாத்தனர். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவது மற்றும் கொரோனா மருத்துவ பரிசோதனை உபகரணங்களை உற்பத்தி செய்வதில் பெண் விஞ்ஞானிகள் ஒரு பெரிய பங்காற்றினர் என கூறியுள்ளார்.

இந்தியாவில் கிராமப்புற சுகாதார பணியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர் என கூறியுள்ளார்.

No comments

Post a Comment