8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-1 தேர்வில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி

No comments
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடந்து வந்த நிலையில், கடந்த 2017-18-ம் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு, அதன்படி தேர்வு நடந்து வருகிறது.
அந்தவகையில் 5-வது ஆண்டாக இந்த முறை பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடந்து முடிந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 85 ஆயிரத்து 51 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தனர். இவர்களில் இந்த தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதியதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதில் 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

தேர்ச்சி சதவீதம் 90.07 ஆகும். தேர்ச்சி பெற்றவர்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்கள், 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவிகள், ஒரு திருநங்கையும் அடங்குவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி (10.13 சதவீதம் அதிகம்) பெற்றுள்ளனர்.

பிளஸ்-1 தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும்போது, இந்த ஆண்டு பெருமளவில் அது குறைந்துள்ளது. பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்ட பிறகு, நடத்தப்பட்ட தேர்வுகளில் இந்த தேர்ச்சி சதவீதம்தான் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் 91.3 சதவீதம், 2018-19-ம் கல்வியாண்டில் 95 சதவீதம், 2019-20-ல் 96.04 சதவீதம், 2020-21-ம் ஆண்டில் கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த தேர்வின் தேர்ச்சி சதவீதம் 90.07 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

குறிப்பாக, தேர்வு நடந்த கடந்த 2019-20-ம் கல்வியாண்டில் 96.04 சதவீதத்துடன், இதனை ஒப்பிடுகையில், 5.97 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. தேர்வில் தோல்வி அடைந் தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாகவே இருக்கின்றனர். அதிலும் இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

No comments

Post a Comment