State News

5/cate1/State News

National News

6/cate2/National News

District News

6/cate3/District News
adv/#|https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUaM81x5dBNgqc19xZRq7nk8bvPc6vm5_InSBTLLDmgUrwv9RDvnR6ICc4IhvFBWO4IPE_TejU9Jx7gEmnxbuaRwGq5zn3nj84yizPq_HaySyjl2ZfEsdik49frnSMdCYhC8Ba0RxyHVT-5jdBo4fYjoe4kUYLBPcFvowubiAji_R9OeIXioUFigJDPQ/s1600/Ad_728_01.jpg

Sports News

5/cate4/Sports News

World News

5/cate5/World News
adv/#|https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7B9OkC5VATPN3OSpkLMWg5U-zvv6hruPbp5m0KU5r3YvvpkIjBhqcXmE8pVn01li3M2z7mt_Xvx5rBS9PNjjR4KUoWzFgk7pq0zDqHJFD9xfkb0-zlm1iBm_HbzGGNwrREpf5A6Y_pnBaCnrwnukN3GrGLkyQKbGUki9UkEo-ljJhrw1YNS27mVml2w/s1600/Ad_728.jpg

Cinema

3/cate6/Cinema

Recent post

உலக கால்பந்து தரவரிசை : இந்திய அணி முன்னேற்றம்

உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது .இதன்படி இந்திய அணி 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது.
சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து 3-வது கட்ட தகுதி சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது .இதனால் இந்திய அணி 106 வது இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதல் இடத்தில் உள்ளது உள்ளது.

புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா

புஷ்பா பட ஹீரோயினான ராஷ்மிகா மந்தனா அழகு சாதன நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார். அந்த நிறுவனத்தின் சிறப்பு தூதுவராகவும் செயல்பட இருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா, நீண்ட காலமாக விஜய்யுடன் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வந்தார்.
அந்த விருப்பம் 'வாரிசு' படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. 'வாரிசு' படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர கைவசம் சில படங்களும் இருக்கிறது. ராஷ்மிகா சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சத்தமே இல்லாமல் ஒரு அழகு சாதன நிறுவனத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்.

அந்த நிறுவனத்தின் சிறப்பு தூதுவராகவும் செயல்பட இருக்கிறார். முன்னணி கதாநாயகிகள் பலர் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு ஓட்டல்கள், அழகு சாதன நிலையங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள். பலர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். அந்த புத்திசாலித்தனமான கதாநாயகிகள் வரிசையில் ராஷ்மிகாவும் தற்போது இணைந்திருக்கிறார்.

புதிய தொழில்நுட்பத்தில் 'டைட்டானிக்' படம் மீண்டும் ரிலீஸ்

புதிய தொழில்நுட்பத்தில் ‘டைட்டானிக்’ படம் மீண்டும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரையிட இருப்பதாக படக்குழவினர் அறிவித்து உள்ளனர். லியனார்டோ டிகாப்பிரியோ, கேட் வின்ஸ்லெட் நடித்து உலக அளவில் புகழ் பெற்ற ஹாலிவுட் படம், 'டைட்டானிக்'.
'ஆர்எம்எஸ் டைட்டானிக்' என்ற பயணிகள் சொகுசு கப்பல் 1912-ல் தனது முதல் பயணத்தை வட அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் இருந்து தொடங்கியபோது வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை ஜேம்ஸ் கேமருன் இயக்கி இருந்தார். 1997-ல் திரைக்கு வந்த 'டைட்டானிக் படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் உலகில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில் 'அவெஞ்சர்: எண்ட்கேம்', 'அவதார்' படங்களுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருக்கிறது. 11 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது. இன்றளவும் டைட்டானிக் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் டைட்டானிக் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தை 3டி, 4கே, எச்.டி.ஆர் உள்ளிட்ட உயரிய நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பித்து அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் மீண்டும் திரையிட இருப்பதாக படக்குழவினர் அறிவித்து உள்ளனர். இது டைட்டானிக் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.400 கோடி வசூல் சாதனை படைத்த விக்ரம்...!

கமல் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் விக்ரம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் விக்ரம் வெளிவந்து 23 நாட்கள் ஆகிய நிலையில் தற்போது படம் மிகப்பெரும் வசூல் சாதனையை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.170 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. அதேபோல, கேரளாவில் 38.75 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 36 கோடி, கர்நாடகாவில் 24.2 கோடி, மற்ற மாநிலங்களில் 16.25 கோடி என இந்தியாவில் மட்டும் 287.2 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்திருக்கிறது விக்ரம் படம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான விக்ரம் படத்துக்கு 25வது நாளை எட்டினாலும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!

இந்தியா - இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி தம்புல்லாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய 3-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்த போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கோடு இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

விம்பிள்டன் டென்னிஸ்: தொடக்க சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழம்பெருமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சூன்வோகிவோனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), கேமரூன் நோரி (இங்கிலாந்து), டாமி பால் (அமெரிக்கா), குயான்டின் ஹாலி (பிரான்ஸ்), ஜாமி முனார் (ஸ்பெயின்), பிரான்சிஸ் டியாயோ (அமெரிக்கா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சுவீடனின் மிர்ஜாம் பிஜோர்க்லுன்டை விரட்டியடித்தார்.

மற்ற ஆட்டங்களில் அன்ஹெலினா கலினினா (உக்ரைன்), லிசா சுரெங்கா (உக்ரைன்), அலிசன் ரிஸ்கி (அமெரிக்கா), அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) ஆகியோர் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர். மழை குறுக்கீடு காரணமாக வெளிப்புற மைதானங்களில் நடக்க இருந்த போட்டிகள் பாதிக்கப்பட்டன.

2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று முன்தினம் நடந்தது. 'டாஸ்' ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆட்டம் தொடங்கும் முன்பே மழை குறுக்கிட்டதால் 2 மணி நேரம் தாமதமாக ஆரம்பமானது. அத்துடன் போட்டி 12 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. கேப்டன் ஆன்டி பால்பிர்னி (0), பால் ஸ்டிர்லிங் 4 ரன்னிலும், காரெத் டெலானி 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் அந்த அணி 22 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (3.5 ஓவர்களில்) இழந்து தத்தளித்தது. 4-வது வீரராக களம் கண்ட ஹாரி டெக்டர் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோர் மூன்று இலக்கத்தை எட்ட வழிவகுத்தார். அவருடன் இணைந்த விக்கெட் கீப்பர் லார்கான் டக்கர் 18 ரன்னில் யுஸ்வேந்திர சாஹல் சுழலில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.